ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இதற்கிடையே, டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் வரும் 27-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இதில் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர், கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் பங்கேற்கின்றனர். விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், பும்ரா, ரவீந்திர ஜடேஜா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், குல்தீப் யாதவ் ஆகியோரின் தேர்வு உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் இதுவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் புரோமோ இன்று வெளியிடப்பட்டது. இந்த புரோமோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.