சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த 19-ந்தேதி சவரன் ரூ.55 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின் நேற்று சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.54,760-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,160 குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.145 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,700-க்கும் ஒரு சவரன் ரூ.53,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.2.50 பைசா குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.86.50-க்கும் பார் வெள்ளி ரூ.86,500-க்கும் விற்பனையாகிறது.