Mnadu News

தமிழகத்தில் இன்று தொடங்குகிறது ‘கத்திரி வெயில்’

சென்னையில் கோடை மழைக்கு வாய்ப்பு இல்லை என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ‘அக்னி நட்சத்திரம்’ என்று கூறப்படும் கத்திரி வெயில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. பொதுவாகவே கத்திரி வெயிலின் போதுதான் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகும். ஆனால், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்தே 100 டிகிரியை தாண்டி வெப்ப நிலை பதிவாகி வருகிறது. இன்று தொடங்கும் கத்திரி வெயிலின் தாக்கம் வரும் 28-ந் தேதி வரை நீடிக்கும்.

அதாவது, 25 நாட்கள் கத்திரி வெயில் வாட்டி வதைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்ப அலை இயல்பை விட அதிகமாக இருக்கும் எனவும், சில மாவட்டங்களில் கோடை மழையும் பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Share this post with your friends

“‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்தவர்கள் பொய்களை பரப்புகிறார்கள்” – பிரதமர் மோடி

காங்கிரஸ், சமாஜ்வாடி மற்றும் ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்தவர்கள் சி.ஏ.ஏ. குறித்து பொய்களை பரப்பி...

Read More