பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாமே பான் இந்தியா படங்களாகவே தற்போது திரையரங்குகளில் உலகமெங்கும் பல மொழிகளில் வெளியாகின்றன. ஆனாலும், அப்படி வெளியாகும் பல படங்களில் சில படங்களே 100 கோடிகளை ஈட்டி சாதனை படைகின்றன. இதோ அவற்றை பார்ப்போம்.
வலிமை, ரத்தம் ரணம் ரௌத்திரம், பீஸ்ட், கே ஜி ஃப் 2, டான், விக்ரம் ஆகிய படங்களே இதுவரை 100 கோடிகளை அள்ளி சென்றவை. அதில், தற்போது பொன்னியின் செல்வன் 1 இணைந்துள்ளது.
தற்போது வரை பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகமெங்கும் 120 கோடிகளை கடந்து இன்னும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இன்னும், 10 நாட்கள் இப்படம் திரையில் ஓடினால் 500 கோடிகளை எட்டும் என்றும் சொல்லப்படுகிறது.