ராமேசுவரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த 27ஆம் தேதி மீன்பிடித்து கொண்டிருக்கும் போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் நடைப்பெற்றது. இதில் கைது செய்யப்பட்ட 7 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்து ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீண்டும் குறிப்பிட்ட காலத்திற்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த வழக்கில் இவர்கள் சிக்கினால், அவர்களுக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்து விடுதலை செய்துள்ளது இலங்கை நீதிமன்றம். அந்த 7 மீனவர்களும் தற்போது இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இன்னும் 2,3 தினங்களில் அவர்கள் இந்தியா திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மீனவர்கள் வந்த படகு குறித்த விசாரணை வரும் ஜனவரி மாதம் நீதிமன்றத்திற்கு வரும் என கூறப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More