நெல்சன் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “ஜெயிலர்” திரைப்படம் வசூல் மழையை கொட்டி வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. ஆம், தற்போது வரை இப்படம் 608 கோடிகளை குவித்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. இந்த வெற்றியின் மூலம் சன் பிக்சர்ஸ், ரஜினி, நெல்சன் என மூவருமே மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்களாம்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன், படத்தின் சக்ஸஸ் பார்ட்டி சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் நடத்தப்பட்டது, இதில் ரஜினி கலந்து கொள்ள மாட்டார் என நினைத்த நிலையில், சர்ப்ரைஸ் விசிட் அடித்து அனைவரையும் திக்குமுக்காட வைத்துள்ளார்.
இதை தொடர்ந்து தற்போது தா. சே. ஞானவேல் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தின் நடிகர்கள் தேர்வு தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. லைக்கா நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில், பல மாபெரும் நடிகர்கள் லிஸ்டில் உள்ளனர் என்கிற தகவல் நமக்கு கிடைத்துள்ளது.
ஆம், அமிதாப் பச்சன், பகத் பாசில், நானி என சிறந்த நடிகர்களை தேர்வு செய்து வருகிறார் இயக்குனர் ஞானவேல். மேலும், இதில் ஜெய் பீம் மணிகண்டன் முக்கிய ரோலில் நடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்களுக்கு கோடிகளில் சம்பளத்தை லைக்கா கொட்டி கொடுக்க உள்ளது எனவும் சொல்லப்படுகிறது. பேட்ட, தர்பார், ஜெயிலர் படங்களின் பாடல்கள் பெரிய அளவில் மக்களை சென்றடைந்தன. இந்த நிலையில் நான்காவது முறையாக அனிருத் மீண்டும் ரஜினிகாந்த் படத்துக்கு இசை அமைக்க உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
மாமன்னன் படத்தில் நடித்த பின்னர் பகத் பாசில் மார்க்கெட் உச்சத்தை தொட்டு உள்ளது. அதில் ரத்தினவேலு கதாபாத்திரம் மக்களை மிகவும் சென்றடைந்த நிலையில், தற்போது தலைவர் 170 படத்திலும் இவரை பிரதான வில்லனாக நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனர். இதில் நடிக்க 8 கோடிகளை லைக்கா சம்பளமாக வழங்க உள்ளது.
மலையாள திரை உலகில் மோகன்லால் தான் அதிகபட்சமாக 25 கோடிகளை வாங்கி வருகிறார், அதற்கு அடுத்த படியாக மம்மூட்டி 15 கோடிகளை வாங்கி வருகிறார், மேலும் இன்னும் பல நடிகர்கள் 5 கோடிகள் வரை வாங்கி வருகின்றனர். அதில் பகத் பாசில் சென்ற படமான மாமன்னன் வரை 5 கோடிகள் தான் வாங்கி வந்தாராம். இதன் அசுர வெற்றி தமிழில் பகத் பாசில் அவர்களுக்கு ஒரு புதிய மார்க்கெட்டை உருவாக்கி உள்ளது குறிப்பிடதக்கது.