ஏ ஆர் முருகதாஸ் கதை எழுத எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்க லைக்கா தயாரிப்பு என இப்படி நான்கு வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது “ராங்கி”. திரிஷா முன்னணி ரோலில் நடித்து உள்ளார். சி சத்யா இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார்.
மூன்று வருடங்களுக்கு முன்பே இப்படத்தின் டீஸர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமான நிலையில், தற்போது தான் படத்தின் முழு பணிகளும் முடிந்து டிசம்பர் 30 அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்து உள்ளது.
இதானல் திரிஷா ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
அடுத்த வருடம் திரிஷாவின் வருடம் என்று கூட சொல்லலாம். பொன்னியின் செல்வன் 2, விஜய் 67, அஜித் 62 ஆகிய படங்கள் வெளியாகும் என்பதால் மீண்டும் திரிஷாவின் கேரியர் சூடு பிடிக்க துவங்கி உள்ளது.