தூத்துக்குடி;
தூத்துக்குடி மாவட்டம் துலுக்கர்பட்டியை சேர்ந்த திருநங்கை மகேஷ் மற்றும் தென்காசி மாவட்டம் கே.ஆலங்குளத்தினை சேர்ந்த அனன்யா ஆகிய இருவரையும் நோவாபூபன் மற்றும் விஜய் என்ற இளைஞர்கள் கடத்தி சென்று காட்டுபகுதியில் வைத்து தாக்கியதோடு அனன்யாவின் முடியை பிளேடால் அறுத்துள்ளனர். அதை வீடியோவாக அந்த இளைஞர்கள் எடுத்தது மட்டுமின்றி அவர்களை இந்த ஊரில் இருக்ககூடாது என்று அரிவாளை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையெடுத்து 2 திருநங்கைகளும் யாரிடமும் சொல்லமால் அங்கிருந்து சென்றதாக தெரிகிறது. இந்த நிலையில் 2 திருநங்கைகள் தாக்கப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து நோவாபூபன் மற்றும் விஜய் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவான இருவரையும் தேடி வருகின்றனர்.