கூலி படத்திற்க்காக விசாகப்பட்டினத்திற்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்.அப்போது சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் வேட்டையன் படம் எல்லாருடைய எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் வெளிநாடுகளிலும் வேட்டையன் படத்திற்கு முன்பதிவு நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் தர்பாருக்கு பிறகு முழுவதுமாக போலீசாக நடிப்பது வித்தியாசமாக உள்ளது என்றார்.அதனை தொடர்ந்து செய்தியாளர் ஒருவர் திருப்பதி லட்டு சர்ச்சை குறித்து கேள்வி கேட்டதற்கு கருத்து தெரிவிக்க மறுத்து ‘மன்னித்துவிடுங்கள்’ என்று கூறி அங்கிருந்து சென்றார்.