Mnadu News

திருவண்ணாமலை தீபத் திருவிழா: சிறப்பு ரயில்கள் இயக்கம்.

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்துக்கு டிசம்பர் 6 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 6 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு வரும் 6,7,8-ஆம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அதே சமயம்,திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு 2,700 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று தமிழக போக்குவரத்துத் துறை அரசு முதன்மைச் செயலர் கே.கோபால் தெரிவித்தார்.
இதற்காக, திருவண்ணாமலையில் அமைக்கப்பட்டுள்ள 9 தற்காலிக பேருந்து நிறுத்தங்கள், 4 கூடுதல் தற்காலிகப் பேருந்து நிறுத்தங்களை போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலர் கே.கோபால் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தீபத் திருவிழாவுக்காக சென்னை, புதுச்சேரி, பெங்களூரு, சேலம், காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், ஈரோடு, கோவை, கடலூர், நாகப்பட்டினம், கும்பகோணம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி பகுதிகளுக்கு மொத்தம் 6,500 நடைகள் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
பக்தர்கள் சிறப்புப் பேருந்துகளின் இயக்கம் குறித்த தகவல்களை 9445456040, 9445456043 என்ற கைப்பேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

Share this post with your friends