சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ,அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வரும் வரை பொதுக்குழு கூட்ட மாட்டோம் என நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளோம். இந்த ஆட்சி அமைந்ததில் இருந்து தற்போது வரை மெத்தனப்போக்குடன்தான் செயல்பட்டு வருகிறது என்பது அனைவருக்குமே தெரியும். மக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் மின் கட்டணம், சொத்து வரியை தி.மு.க. அரசு உயர்த்தியுள்ளது. திமுக ஆட்சியில் ,கமிஷன் அதிகமாக கேட்பதால், பணிகளை எடுக்க யாரும் முன்வரவில்லை. அதேபோல், தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், கிராமங்கள் வரை வளர்ச்சிப் பணிகள் எல்லாம் முடங்கிக் கிடக்கிறது என கூறினார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More