திண்டிவனம் அடுத்த சாரம் லேபை அருகே ஒலக்கூர் சப் இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்பொழுது சந்தேகத்திற்கிடமாக அவ்வழியாக சென்ற ஒரு காரை மடக்கிய போது அதிலிருந்து நபர்கள் தப்ப ஓட முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்து காரை சோதனை செய்ததில் அதில் ஆடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் அவர்கள் திண்டிவனம் நத்தமேடு பகுதியை சேர்ந்த குமார் (25), சத்யராஜ் (26), சுதாகர் (22), கமல் (34),ஆகியோர் என்பது தெரிய வந்தது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் தீபாவளி பண்டிகைக்காக ஆடுகள் திருடியதுதெரிய வந்தது. மேலும் அவர்களிடம் இருந்த 20 ஆடுகள், கார் மற்றும் 38 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ஆடு திருடிய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.