தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவண்டியில் நடைபெறவுள்ளது.இந்நிலையில் இந்த மாநாட்டில் கட்சி கொடியின் அர்த்தம் மற்றும் கட்சி கொள்கைகளை த.வெ.க தலைவர் விஜய் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டிற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மாநாட்டின் பந்தல் கால் நடும் விழா நாளை நடைபெற உள்ளது.இதன்படி நாளை காலை 4 மணி முதல் 6 மணிக்குள் பந்தல் கால் நடப்படுவதாகவும் நிகழ்ச்சி முடிந்ததும் மாநாட்டுக்கான பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி தொடங்க உள்ளதாகவும் த.வெ.க கட்சியின் தரப்பில் தகவல் தெரியவந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் த.வெ.க கட்சி தலைவர் விஜய் மற்றும் கட்சி உறுப்பினர் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.