Mnadu News

நடுக்கடலில் காவல் அதிகாரிகளுக்கும், மீனவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு

பாம்பனில் இருந்து கடலில் ஒரு வல்லம் (பெரிய படகு) மீன்பிடித்துக் கொண்டு கோடியக்கரை அருகே படகு பழுதாகி நின்றதாக கூறப்படுகிறது. அப்பொழுது வெளியூர் மீனவர்கள் மீன்பிடிப்பதாக தகவல் கிடைத்து வேதாரண்யம் மீன்வளத்துறை அதிகாரிகள் கடலோர போலீசாரும் அந்தப் படகை பறிமுதல் செய்ய கடலுக்கு படகில் சென்றனர். அப்போது போலீசாருக்கும் மீனவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளானது. பிறகு படகை கடலிலே விட்டுவிட்டு அதிகாரிகளும் போலீசாரும் கடற்கரைக்கு திரும்பி விட்டனர். இது கூறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும டி.எஸ்.பி சுரேஷ் யிடம் மீன்வளத்துறை ஆய்வாளர் நடேசராஜா மற்றும் கோடியக்கரை மீனவ நல உரிமைசங்கத்தினரும் புகார் அளித்துள்ளனர். இருதரப்பு புகார்களையும் பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Share this post with your friends