புதுடெல்லி: நாடு முழுவதும் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையாக சந்தேகத்திற்குரிய அமைப்புகள் மற்றும் நபர்களிடம் தேசிய சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் நாடு முழுவதும் 30 இடங்களில் இன்று என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்று வருகிறது. பயங்கரவாதிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பாக தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், டெல்லி, சண்டிகர், உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்று வருகிறது.