நாட்டில் ஒரு நாளில் புதிதாக 2 ஆயிரத்து 468 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து ஆயிரத்து 934 ஆக உள்ளது, அதே நேரத்தில் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 318 ஆகக் குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 280 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோரின் விகிதம் 98 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 318 ஆக உள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More