காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டத்தில் அனுமந்தண்டலம் ஊராட்சியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் உடல் நல குறைவினால் இறந்துள்ளார். இவரது உடலை நல்லடக்கம் செய்ய போகும் வழியில் பட்டா நிலங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளது. மேலும் உத்திரமேரூர் ஏரிக்கு நீர் செல்லும் பெரிய கால்வாயை கடந்து, அதன் பின் சுடுகாட்டுக்கு செல்லும் நிலையும் உள்ளது. தற்போது அங்கு நீர் செல்லுவதால் இடுப்பளவு நீரில் நீந்தி உறவினர்கள் அந்த மூதாட்டியின் உடலை ஆபத்தான நிலையில் எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்துள்ளனர்.
இந்த கால்வாயை கடக்கும் நிலையில் மதகின் ஷட்டர் அடைக்கப்பட்டு நீரின் வேகம் மற்றும் அளவு குறைந்த பின்னரே உடலை எடுத்துச் சென்றதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இனி வரும் காலங்களில் அனுமந்தடலம் காலணிக்கு நல்லடக்கம் செய்ய சரியான பாதை அமைத்து தர அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.