நெல்லை மாவட்டம்;
நெல்லை மாநகரப் பகுதியில் இன்று பிற்பகல் வரை வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் பிற்பகல் இரண்டு மணிக்கு மேல் வண்ணாரப்பேட்டை, பாளையங்கோட்டை, சமாதானபுரம், தச்சநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. திடீர் மழையுடன் கருமேகங்கள் திரண்டதால் சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்குகள் எரிய செய்தபடி சென்றன. வடகிழக்கு பருவமழை முன்னோட்டமாக தொடர் மழை பெய்து வருவது நெல்லை மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.