Mnadu News

பணவீக்கத்தை எதிரான நடவடிக்கை மெதுவாகவே இருக்கும்: சக்திகாந்த தாஸ் பேச்சு.

லண்டனில் நடைபெற்ற மத்திய வங்கிகளுக்கான கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியுள்ள ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்;, எங்களுடைய தற்போதைய மதிப்பீட்டின்படி, பணவீக்க செயல்முறை மெதுவாகவும், நீண்டதாகவும் இருக்கும். இது நடுத்தர காலப்பகுதியில், பணவீக்க இலக்கான 4 சதவீதத்தை அடைய உதவக் கூடியதாக இருக்கும். நடப்பு 2023–24 நிதியாண்டில், பணவீக்கம் 5.1 சதவீதமாக, பராமரிக்கும் வரம்புக்குள் இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.ஆனாலும், அது 4 சதவீத இலக்கை விட அதிகமாகவே இருக்கும். வளர்ச்சியின் நோக்கத்தை மனதில் வைத்துக்கொண்டு, விலைகளின் ஸ்திரத்தன்மையை பராமரிக்க வேண்டிய கட்டாயத்தில், ரிசர்வ் வங்கி உள்ளது என்று கூறியுள்ளார்.

Share this post with your friends