இலங்கை கொழும்பு – மட்டக்களப்பு இடையேயான ரயில் தடத்தில் நேற்று பயணிகள் ரயில் அதிகாலை 2 மணியளவில் வந்துகொண்டிருந்தது. அப்போது ரயில் தடத்தில் குறுக்கே வந்த யானைகள் மீது ரயில் மோதியது. இதில், 3 யானைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. அதோடு, பயணிகள் ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் கொழும்பு-மட்டக்களப்பு இடையே ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ரயில்வே பணியாளர்கள் ரயில் பாதையை சரி செய்யும் பணியில் ஊடுபட்டுள்ளனர்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More