Mnadu News

பாஜகவில் இணைந்த மேகாலயா எம்எல்ஏக்கள்.

டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் ஃபெர்லின் சங்மா, சாமுவேல் சங்மா, பெனெடிக் மரக் மற்றும் ஹெச்.எம்.ஷாங்ப்லியாங் ஆகிய நால்வரும் பாஜகவில் இணைந்தனர்.இதில் ஃபெர்லின் சங்மா, பெனெடிக் மரக் ஆகிய இருவரும் ஆளும் தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் சமீபமாக பாஜகவுடன் தொடர்பில் இருந்ததாக தகவல்கள் வெளியாகி வந்தன. அதோடு,சாமுவேல் சங்மா சுயேச்சை எம்எல்ஏ. மற்றொரு எம்எல்ஏவான ஹெச்.எம்.ஷாங்ப்லியாங் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். 2023 ஆம் ஆண்டில் மேகாலயாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends