காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க-வில் சேர்ந்தது ஏன் என எம்.எல்.ஏ. விஜயதாரணி விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் டெல்லியில் அளித்த பேட்டியில், காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்ததில் மகிழ்ச்சி. மிகப் பெரிய தலைவர் பிரதமர் மோடியின் கீழ் இந்தியா பெரும் வளர்ச்சியை கண்டுள்ளது. பா.ஜ.க-வை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அக்கட்சியில் இணைந்துள்ளேன். பா.ஜ.க. ஆட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பிரதமர் மோடியின் சேவை நாட்டிற்கு மிகவும் அவசியமானதாக உள்ளது. நடந்தவை நடந்ததாக இருக்கட்டும். இவ்வாறு அவர் கூறினார்.