செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசின் சார்பில் “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது” வழங்கப்படும்.
அதன்படி 2023-ம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது கவிஞர் முமேத்தாவுக்கும், பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.மேலும் இருவருக்கும் தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், நினைவுப் பரிசும் வழங்கி சிறப்பித்தார்.
