Mnadu News

பிரச்சினையை கண்டு ஓடி ஒளிபவன் நான் அல்ல – சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டசபையில் கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானங்கள் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசினார். அப்போது “விஷ சாராயத்தால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உயர்கல்வி வரையிலான செலவுகளை அரசே ஏற்கும். பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். பெற்றோரில் ஒருவரை இழந்திருந்தால் ரூ.3 லட்சம் வைப்பு நிதி அளிக்கப்படும். இருவரையும் இழந்திருந்தால் அவர்களின் வங்கிக்கணக்கில் ரூ.5 லட்சம் வைப்பு நிதி அளிக்கப்படும். 18 வயது நிரம்பியதும் வட்டியுடன் தொகை அளிக்கப்படும்.

அதிமுக ஆட்சியில் நடந்த சம்பவங்களை பட்டியலிட்டு அரசியல் செய்ய விரும்பவில்லை. பிரச்சினையை கண்டு ஓடி ஒளிபவன் நான் அல்ல, நடவடிக்கை எடுத்துவிட்டு பொறுப்பை உணர்ந்து பதில் அளித்துள்ளேன். திறந்த மனதோடு இரும்பு கரம் கொண்டு குற்றம் புரிந்தவர்களை அடக்கி வருகிறேன்.” இவ்வாறு அவர் பேசினார்.

Share this post with your friends