டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்ற 6-ஆவது இந்திய கைப்பேசி மாநாட்டை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார். அங்குள்ள கண்காட்சியைப் பார்வையிட்ட அவர், அதிவேக அலைக்கற்றைத் திறன் கொண்ட 5ஜி சேவையையும் அறிமுகப்படுத்தி தொடங்கிவைத்தார். அப்போது 5ஜி சேவையின் செயல்பாட்டை பிரதமர் மோடிக்கு சோதனையாக காண்பிக்கப்பட்டது. இந்த 5ஜி சேவை நாட்டின் முக்கிய நகரங்களில் முதலில் அறிமுகப்படுத்தப்படும். பின்னர், அடுத்த சில ஆண்டுகளில் படிப்படியாக விரிவுபடுத்தப்படும். இந்தச் சேவையின் மூலம் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார உயர்வு 2035 -ஆம் ஆண்டில் சுமார் 450 பில்லியன் டாலர் அதாவது 35 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More