சர்வதேச அளவில் பல நிறுவனங்கள் கொரோனா தொற்றுக்கு பிறகு பல வித மாற்றங்களை ஊழியர்களுக்கு உகந்ததாக கொடுத்து வருகின்றன.
பல்வேறு நிறுவனங்கள் வாரத்தில் 4 நாட்கள் வேலை என்ற கொள்கைக்கு மாறி வரும் நிலையில், பிரிட்டனில் சுமார் 100 நிறுவனங்கள் தங்கள் அலுவலக பணி நாட்களை 4 நாட்களாக மாற்றியுள்ளன.
இந்த மாற்றத்தின் மூலம் சம்பள குறைப்போ அல்லது ஊழியர்கள் குறைப்போ அல்லது வேலை நேர நீட்டிப்போ இருக்காது என அந்த நிறுவனங்கள் கூறி உள்ளதால் ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால், சுமார் 3000 ஊழியர்கள் பயன் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.