தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வட மாவட்டங்களில் தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. தொடர்மழை காரணமாக சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஏரியின் பாதுகாப்பை கருதி திருவள்ளூர் மாவட்டம் புழல் நீர்த்தேக்கத்தில் இருந்து இன்று பிற்பகல் 3 மணிக்கு வினாடிக்கு 100 கன அடி உபரி நீர் திறக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஏரிக்கு நீர்வரத்து 2 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் உபரிநீர் கால்வாய் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதைபோல செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு 100 கனஅடி நீர் வெளியேற்றப்படும் என்று மாவட்ட கலெக்டர் ஆர்த்தி அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More