Mnadu News

பெண்களுக்கு 41 சதவீதம் ஒதுக்கீடு – மம்தா புரட்சி

மேற்குவங்கத்தில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சி உட்பட அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மேற்குவங்க முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.

மொத்தமுள்ள 42 மக்களவைத் தொகுதிகளில் 41 சதவீதத்தை பெண் வேட்பாளர்களுக்கு ஒதுக்கியுள்ளார். இதுமட்டுமல்லாமல் ஏற்கனவே எம்பியாக இருப்பவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அவர்கள் கட்சிப்பணிகளைக் கவனிப்பார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

ஜார்கண்ட் அசாம் பீகார் மாநிலங்களிலும் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிடுகிறது. மேலும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் நேரிடையாக போட்டியிடாமல் அங்குள்ள மாநில கட்சிக்கு ஆதரவு தருவதாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி   தெரிவித்துள்ளார்.

Share this post with your friends