மூத்த வீரர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெறும் நிகழ்வில் கலந்து கொண்ட பேசியுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில், இத்தனை ஆண்டுகளில் கிரிக்கெட் சிறிது மாறிவிட்டது. கிரிக்கெ தற்போது மிகப் பெரிய தொழிலாக உருவெடுத்துள்ளது. டி20 போட்டிகளில் மட்டுமல்லாது டெஸ்ட் போட்டிகளுக்கும் அதிக அளவிலான பணம் செலவிடப்படுகிறது. சிறிய அணிகளைக் காட்டிலும் பெரிய அணிகளுக்கு அதிக அளவிலான ஊதியம் வழங்கப்படுகிறது. இதனால், சிறிய அணிகள் பாதிக்கப்படுகின்றன. இந்தக் குறைகளை களைய சரியான வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.அவ்வாறு செய்யாவிட்டால் சில பெரிய அணிகள் மட்டுமே கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும். அதில் அர்த்தமே இல்லை. அது விளையாட்டை அழித்துவிடும் என்றார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More