Mnadu News

‘பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்.’ நூலை முதல்-அமைச்சர் வெளியிட்டார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரங்கில் ‘ஜானகி எம்.ஜி.ஆர்.’ நூற்றாண்டு துவக்க விழா இன்று நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் தொடக்கமாக கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து அன்னை ஜானகி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு குறுந்தகடு, சிறப்பு மலர் மற்றும் ‘பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்.’ என்ற நூலையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உணவுப்பொருள் மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share this post with your friends