Mnadu News

“போலி வீடியோ குறித்து புகார் தெரிவியுங்கள்” – பிரதமர் மோடி

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தன்னுடைய குரலை வைத்து போலி வீடியோக்கள் உருவாக்குவது அபாயத்தை ஏற்படுத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

வடக்கு மகாராஷ்டிரா மாவட்டமான சத்தாராவில் உள்ள கராத் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி என்னுடைய குரலை வைத்து போலி வீடியோக்கள் உருவாக்குகின்றனர். இது அபாயத்தை ஏற்படுத்தும். போலி வீடியோவை பார்த்தீர்கள் என்றால், காவல்துறைக்கு தகவல் தெரிவியுங்கள் என அறிவுறுத்தியுள்ளார். மேலும் இதுபோன்ற போலி வீடியோக்களுக்கு பின்னணியில் உள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தினார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாக ஒரு வீடியோவை சித்தரித்து வெளியிட்ட விவகாரத்தில், தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன், ரேவந்த் ரெட்டிக்கு சம்மனும் அனுப்பியுள்ள நிலையில் தற்போது இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this post with your friends

“‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்தவர்கள் பொய்களை பரப்புகிறார்கள்” – பிரதமர் மோடி

காங்கிரஸ், சமாஜ்வாடி மற்றும் ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்தவர்கள் சி.ஏ.ஏ. குறித்து பொய்களை பரப்பி...

Read More