சென்னை உயர் நீதிமன்றத்தில், திருப்பூரைச் சேர்ந்த வழக்குரைஞரும், இந்து முன்னேற்ற கழகத் தலைவருமான கோபிநாத் தாக்கல் செய்த மனுவில், “சென்னை புரசைவாக்கம், பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் செயல்பட்டு வரும் ரப்பானியா அரபு கல்லூரியில், மாநகராட்சியின் அனுமதியின்றி மசூதி கட்டப்பட்டு வருகிறது.எனவே, அரபி கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டுள்ள மசூதி கட்டுமானங்களை அகற்ற உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. ப்போது இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், பொதுநல நோக்குடன் இந்த வழக்கு தொடரப்படவில்லை எனவே 25 ஆயிரம் அபராதத்துடன் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடுவதாக தெரிவித்தனர்.
![](https://mnadu.com/wp-content/uploads/2024/12/mk-stalin-300x158.jpg)
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More