Mnadu News

மதுரையில் பிரபல ஹோட்டலில் உணவு பார்சல் வாங்கிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி! 

உணவு வாங்கிய பெண்: 

மதுரை சோலையழகுபுரம் பகுதியை சேர்ந்த முகமது என்பவரின் மனைவி நேற்று மதியம் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள கெளரி கங்கா உணவகத்தில் சாப்பாடு பார்சல் ஒன்றை வாங்கி சென்றுள்ளார். வீட்டிற்கு சென்று பார்சலை பிரித்தபோது தான் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 

பார்சலில் பிளேடு: 

 பார்சலில் இருந்த உணவில் பாதி உடைந்த பிளேடு துண்டு ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.  இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு நேரில் சென்று கேட்டபோது மிகவும் அலட்சியமாக பதில் கூறியதோடு, இருவருக்குள் கடுமையான சண்டை மூண்டு உள்ளது.  

புகார் : 

இதை இப்படியே விட்டு விட கூடாது என எண்ணிய முகமது உணவுப் பாதுகாப்புத்துறைக்கு கொடுத்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முகமது மனைவி ஆர்டர் செய்த உணவை சோதனை செய்ததோடு, உணவகத்தில் சோதனை மேற்கொண்டனர்.

புகாரின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது சில தவறுகள் அந்த ஹோட்டல் நிர்வாகம் செய்துள்ளதை சுட்டிக்காட்டிய குழு அதை சரி செய்ய சொல்லி, குறிப்பிட்ட தொகையை அபராதமாக விதித்தனர். 

Share this post with your friends