மதுரை திருமங்கலத்தை அடுத்த அழகு சிறை கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு பெண் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் வெடித்துச் சிதறி உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த ட்விட்டர் பதிவில், ‘மதுரை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் மதிப்புமிக்க உயிர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதோடு, விபத்த்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’ ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More