சென்னை: தமிழக சட்டசபையில் 2024-2025-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்து முடித்த பின்னர் பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, மத்திய அரசின் திட்டங்களை வேறு பெயர்களில் அறிவிக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் அரசு வெறும் அறிவுப்புகளை வெளியிடுகிறது. வருவாயை பெருக்க முடியாமல் மத்திய அரசு மீது பழிபோடுகிறது தமிழக அரசு. அதிகமான கடன் பெற்ற மாநிலம் தமிழ்நாடு தான் என்று கூறினார்.