இந்தியாவின் தேசிய பறவை மயில் என நாம் அனைவர்க்கும் தெரியும். மயில் பறக்குமா? நீந்துமா? மயில் என்ன சாப்பிடும்? எங்கு தங்கும்? போன்ற சுவாரசியமான கேள்விகளுக்கு பதில்களை பார்க்கலாம் வாங்க.
1. மயில் என்ன சாப்பிடும்?
மயில்கள் தனக்கு கிடைக்கும் தாவரங்கள், எறும்புகள், பூக்கள், எலிகள், தானியங்கள், தாவரங்கள், விதைகள், தவளைகள், வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் நாம் அனைவரும் நம்பக்கூடிய பாம்புகள். ஆம், மயில்கள் சிறிய வகை பாம்புகளையும் உண்ணுகிறது.
2. பாம்பா மயிலா!!
மயில் இருக்கும் இடத்தில் பாம்பு இருக்காது என்று சொல்வார்கள். இந்தியாவில் மயில்களை வீட்டில் வளர்ப்பதற்கு தடை உள்ளது. மேலும், 1972-ம் ஆண்டு இயற்றிய இந்தியச் சட்டப்படி, மயிலை வேட்டையாடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். காடுகளிலும், வயல்களிலும் பாம்புகளை மயில்கள் உண்ணுகிறது. மயில்கள் விஷப்பாம்புகளை கூட விட்டு வைப்பதில்லை. கோவில்களில் வளர்க்கப்படும் மயில்கள் அங்கு சுற்றி திரியும் பாம்புகளையும் உண்ணுகிறது. பாம்புகளுக்கு மயிலுக்கு நாடக்கும் போட்டியில் மயிலே வெற்றி பெறுகிறது.
3. மயில் பறக்குமா?
என்ன தான் மயிலுக்கு நீண்ட தொகை இருந்தாலும் அதனால் நீண்ட தூரம் பறக்க முடியாது. அதுவும் வெகு தூரம் பறக்காது. தன்னை ஆபத்தில் இருந்து காத்துக்கொள்ளவே பறக்கிறது. மயில்கள் மணிக்கு சுமார் 19 கிலோமீட்டர் வேகத்தில் ஓட கூடும் பறவையாகும். மயில்களின் இறக்கைகள் சுமார் 140 முதல் 160 சென்டி மீட்டர் வரை இருக்கக்கூடும். மயில்களின் இறகுகள் அதனுடைய உடம்பை 60% மறைத்துக் கொள்ளுமாம்.
4. மயில்கள் என்ன ஒலியெழுப்பும்?
மயில்களால் 11 வகையான ஒலி எழுப்ப முடியும். பொதுவாகவே மயில்களில் சத்தம் நமக்கு எரிச்சல் உட்டுவதாகவே இருக்கும். அதிக ஒலியெழுப்பும் பறவைகளில் மயிலும் ஒன்று. சாதாரண நாட்களைவிட, மழைக் காலங்களில் அதிக முறை ஒலியெழுப்பும். காடுகளில் கேட்கும் மயிலின் குரல் மூலம், புலி போன்ற ஆபத்தான விலங்குகளின் இருப்பைத் தெரிந்துகொள்ளலாம்.
5. பெண் மயிலின் பெயர் பீகாக் இல்லை!!
ஆங்கிலத்தில் பீகாக் என்றால் அனைத்து மயில்களை குறிக்காது, அது ஆண் மயிலை மட்டும் தான் குறிக்கும் சொல்லாகும். ஆங்கிலத்தில் மயிலின் பொதுப் பெயர் Peafowl. ஆண் மயிலின் பெயர் Peacock என்றும், பெண் மயிலின் பெயர் Peahen என்றும் அழைக்கப்படும். இந்திய மயிலின் அறிவியல் பெயர், பாவோ க்ரிஸ்டாடஸ் (Pavo Cristatus) ஆகும். ஆண் மயிலை தமிழில் சேவல் என்றும் வழங்கப்படும்.
6. மயில் முட்டை போடுமா?
பெண் மயில் ஆனது அதிகபட்சம் ஒன்பது முட்டைகள் வரை இடக்கூடும். பெண் மயில்கள் தனது முட்டைகளை 28 நாட்கள் அடைகாக்கும். பிறந்து ஒரு நாளே ஆன மயில் குஞ்சுகள், தாயின் உதவியின்றித் தானாகவே நடக்க ஆரம்பிக்கும். உணவு உண்ணவும், நீர் அருந்தவும் செய்யும். முட்டையிலிருந்து வெளிவந்த மயில் குஞ்சுகள் வெறும் 2 மணி நேரத்திலேயே நடக்கப் பழகிக் கொள்ளும் மற்றும் 9 நாட்களில் பறக்கவும் கற்றுக்கொள்ளும்.
7. தேசிய பறவையாக மயில்
1963-ல் மயில், இந்தியாவின் தேசியப் பறவையாக அறிவிக்கப்பட்டது. மயில் இந்தியாவிற்கு மட்டும் தேசிய பறவை இல்லை. மியான்மர் மற்றும் காங்கோ நாடுகளுக்கும் மயிலினங்களைத் தேசியப் பறவையாகக் கொண்டுள்ளது.
8. மயில் நீந்துமா?
மயிலின் கால்களில் சவ்வுகள் இருந்தாலும் அது மரக்கிளைகளை பிடித்துக்கொள்ள மட்டுமே பயன்படுகின்றதே தவிர நீந்துவதற்கு பயன்படுத்தாது. ஆண் மயில்கள் அழகான நீண்ட தொகையை கொண்டு இருந்தாலும் அதுவும் நீந்த உதவுவதில்லை. நீரில் மூழ்கிய ஆபத்து காலத்தில் நீரின் போக்கில் வந்து தப்பிவதற்கு மட்டுமே பயன்படுத்தும்.
9. வெள்ளைநிறத்து மயிலா!!
வெள்ளை மயில்கள் லூசிசம் மரபணுமற்றம் பெற்ற நீலமயில்களின் துணை இனமாகும். பிறக்கும் போது மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த மயில்கள் வளரும் போது வெள்ளை நிறமாக மாறுகின்றன. வெள்ளை மயில்கள் அதிக அளவில் அமெரிக்காவிலேயே காணப்படுகின்றது.
10. மயில்கள் அழிந்து வருகிறதா?
மயில், இந்தியாவின் தேசியப் பறவையாக 1963 ஆம் ஆண்டில் இந்தியா அரசால் அறிவிக்கப்பட்டது. எனினும் மயிலை வேட்டையாடப்படுவதாலும், அது வழித்தடத்தின் பரப்பளவு குறைவதாலும் இந்த இனம் அழிந்துகொண்டிருக்கிறது. விவசாய நிலங்களில் புகுந்து விளைபயிர்களை உண்பதால் இதனை கொல்லவும் செய்கிறார்கள். மயில் கறியில் மருத்துவ குணம் உள்ளது என நம்புகிறவர்கள் உண்டு. இதனாலும் இதனைக் கொன்று உண்கின்றனர். மயில் கறியில் மருத்துவ குணம் உள்ளது என்பது தவறான மூட நம்பிக்கை. ஆகவே மயில்களை பாதுகாக்க 1972 ஆம் ஆண்டில் ஒரு சட்டத்தை அரசு இயற்றியுள்ளது. இந்தியாவில் மயிலை வேட்டையாடுவது குற்றமாகும். வேட்டையாடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். மயிலை பாதுகாப்பது நமது தேசிய கடமை என்பதை மறந்து விடாதீர்கள்.