Mnadu News

மலேசியாவில் நிலச்சரிவு: 9 பேர் பலி:25 பேரைக் காணவில்லை.

தலைநகர் கோலாலம்பூருக்கு வடக்கே 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மத்திய சிலாங்கூர் மாநிலத்தில் படாங் கலி என்ற சுற்றுலா பொழுதுபோக்கு இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட நேரத்தில் 94 பேர் அங்கு இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளதாக இவர்கள் கடந்த புதன்கிழமை அப்பகுதிக்குச் சென்றதாகவும் மாவட்ட காவல்துறைத் தலைவர் சுஃபியன் அப்துல்லா கூறினார் அதோடு, உயிரிழந்த 9 பேரில் 5 வயது சிறுவனும் ஒருவன் என்றும் ஏழு பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காணாமல் போன 25 பேரை மீட்புப் படையினர் தேடி வருவதாகவும் கூறினார். சுமார் 400 மீட்புப்படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர 53 பேர் காயமின்றி மீட்கப்பட்டுள்ளனர்.
ஜன்டிங் ஹைலேண்ட்ஸ் ஹில் ரிசார்ட்டிலிருந்து சற்று தொலைவில் உள்ள ஒரு இயற்கை பண்ணையில் இந்த சுற்றுலா முகாம் அமைந்துள்ளது. இது மலேசியாவின் பிரபலமான சுற்றுலாப் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends