Mnadu News

மாமன்னன் விமர்சனம் மற்றும் வசூல் நிலவரம்! 

மாரி செல்வராஜ்: 

பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய திரைப்படங்களின் அழுத்தமான வெற்றிகளை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் திரைப்படம் மாமன்னன் இந்தப் படத்தில் வடிவேலு, ஃபகத் ஃபாசில், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்டோர் நடிப்பில், இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியாகி உள்ளது. 

படத்தின் நாட்: 

சமூகநீதியை தந்தைக்கு நினைவுபடுத்தும் மகனுக்கும், போராடி தான் உரிமைகளை பெற வேண்டும் என வளர்க்கப்பட்ட மகனுக்கும் இடையே நடக்கும் சுவாரசிய காட்சிகள் தான் மாமனன்னன். ஏழை மாணவர்களுக்கு இலவசமா கல்வி சொல்லி கொடுக்கும் கீர்த்தி சுரேஷின் மையத்தை, தனியார் பள்ளி நடத்தும் நபர் நாசம் செய்கிறார். அது சாதி பிரச்னையாக மாறி விஷ்பரூபமாக மாறுகிறது. அதற்கு பின் என்ன நடந்தது? தனியார் பள்ளியின் உரிமையாளர் யார்? தனிப்பட்ட பிரச்னை எப்படி சாதி பிரச்னையாக மாறியது? இறுதியில் என்ன ஆனது என்பதை சமூகநிதி பக்கம் நின்று படமாக்கியுள்ளார் மாரி செல்வராஜ். 

படத்தின் பிளஸ் மற்றும் மைனஸ்: 

பின்னணி இசை, நடிகர்களின் நடிப்பு, வசனங்கள், ஒளிப்பதிவு போன்றவையே படத்துக்கு பக்கபலமாக உள்ளன. ஆனால், படத்தின் நீளம் படம் பார்ப்பவர்களை சலிப்பு அடைய வைக்கிறது. மொத்தத்தில் “மாமன்னன்” சொல்லி வந்த கருத்தை அழுத்தமாக பதிவு செய்துள்ளது. 

வசூல் நிலவரம் : 

மாமன்னன் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெளியான நிலையில், அந்த எதிர்பார்ப்பு வசூலிலும் தெரிந்து உள்ளது. ஆம், முதல் நாளில் உலகமெங்கும் இப்படம் ₹10 கோடிகளை வசூல் செய்து உள்ளது.இது மேலும் உயரும் என கூறப்படுகிறது. 

Share this post with your friends