Mnadu News

மாவட்ட ஆட்சியரிடம் மண்டியிட்ட விவசாயி..!

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மற்றும் DRO தலைமையில் நடைபெற்றது. அப்போது பேர்ணாம்பட்டு அடுத்த பத்தலப்பள்ளி பகுதியை சேர்ந்த விவசாயி கிருஷ்ணண் என்பவர் கூறுகையில், தங்கள் பகுதியில் உள்ள பத்தலப்பள்ளி மலட்டாறு மற்றும் மலை பகுதிகளில் திமுக பிரமுகர் ராஜமார்த்தாண்டம் என்பவர் மணல் கொள்ளையில் ஈடுபடுவதாகவும் இதனால் விவசாயம் பாதிக்கிறது என அதிகாரிகளிடம் மனு அளித்ததால் என்னை கார் ஏற்றி கொலை செய்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுக்கிறார். இது குறித்து SP அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை நான் தனியாக வீட்டில் வசித்து வருகிறேன். எனது உயிருக்கு அச்சுருத்தல் உள்ளது என்னை காப்பாற்றுங்கள் என கூறி ஆட்சியரிடம் மண்டியிட்டு கோரிக்கை வைத்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this post with your friends