Mnadu News

மியான்மரிலிருந்து 200க்கும் அதிகமான இந்தியர்கள் மீட்பு: வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்.

கடந்த 24 ஆம் தேதி பத்திரிகையாளர்களை சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சி, “இந்திய அரசின் முயற்சியினால் 200க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டுள்ளனர், அதில் 153 பேர் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டிருக்கின்றனர். அதோடு;, 50 பேரை இந்தியாவுக்குள் திரும்ப அழைத்து வருவதற்கான பணி நடந்து வருகிறது. சிலர் தாய்லாந்தின் பிடியில் உள்ளனர், அவர்களது ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. தாய்லாந்து அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம்,” என அவர் கூறியுள்ளார்.
மியான்மரில் போலி வேலை மோசடிகளில் சிக்கிய இந்தியர்களின் விவகாரத்தை மியான்மர் மற்றும் தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
லாவோஸ் மற்றும் கம்போடியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இந்தியர்களின் நிலை தொடர்பாக பேசிய அரிந்தம் பக்சி, 364-367 இந்தியர்கள் லாவோசிலிருந்து திருப்பி அனுப்பப்பட இருக்கிறார்கள் என்றும் அதோடு 100க்கும் அதிகமானோர் கம்போடியாவிலிருந்து திருப்பி அனுப்பப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மியான்மர், லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகளில் சிக்கிய இந்தியர்கள் துபாயை மையமாகக் கொண்டு இயங்கிய போலி முகவர்களின் வார்த்தையை நம்பி சென்றதாகக் கூறப்பட்டுள்ளது.

Share this post with your friends