முதுநிலை மருத்துவ மாணவர்கள் படிப்பை முடித்த பிறகு அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் 2 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும் என்ற விதியை தளர்வு செய்து தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. முன்னதாக முதுநிலை மருத்துவ மாணவர்கள் படிப்பை முடித்த பிறகு அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் 2 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும். தற்போது அது ஓராண்டாக குறைக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற விருப்பம் இல்லாதவர்கள் செலுத்த வேண்டிய தொகை 40 லட்சம் ரூபாய் என்பதில் இருந்து 20 லட்சம் ரூபாயாக குறைத்தும், பிஜி டிப்ளோமா மாணவர்கள் 20 லட்சத்திற்குப் பதிலாக 10 லட்சம் ரூபாய் செலுத்தினால் போதும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More