காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 65ஆயிரம் கன அடியாக குறைந்தது. நீர் வரத்து குறைந்ததால் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 65ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.
,நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21ஆயிரத்து 500 கன அடி நீரும், உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 43 ஆயிரத்து 500 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93 புள்ளி 47 டி.எம்.சியாகவும் உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்து வருவதால் காவிரி கரையோரங்களில் வெள்ள அபாயம் சற்று தனிந்துள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More