வம்சி இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு தயாராகி வருகிறது வாரிசு திரைப்படம். இப்படத்தில் தளபதி விஜய், ரசுமிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், யோகி பாபு, ஷ்யாம், சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட் வெளியாகும் போதும் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், அண்மையில் வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. ஆனால், வெளியானதில் இருந்தே பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.
ரஞ்சிதமே என்கிற பாடல் சென்ற வாரம் வெளியாகி யூடியூபில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது தற்போது வரை. இந்த நிலையில் இப்பாடல் வரவேற்பை பெற்ற அதே வேளையில், திருட்டு சர்ச்சையிலும் சிக்கி உள்ளது. மொச்ச கொட்ட என்று துவங்கும் நாட்டுப்புறப் பாடலை மென்ஷன் செய்து வறுத்து எடுத்து வருகின்றனர்.
இது குறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு விளக்கம் கொடுத்துள்ள பாடலாசிரியர் விவேக் இது காப்பி அல்ல என்றும் பல பாடல்கள் அந்த வகையில் வந்துள்ளது என கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.