Mnadu News

ராமேஸ்வரத்தில் மாசி மஹா சிவராத்திரி தோரோட்டம்

ராமேஸ்வரத்தில் மாசி மஹா சிவராத்திரி தோரோட்டம் ஏராளமானோர் வடம் பிடித்து இழுத்தனர். நாளை சிவாமி தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது.

ராமேஸ்வரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில் மாசி மஹா சிவராத்திரி தோராட்டம் இன்று நடைபெற்றது வெளிமாநில பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்

தீர்தம் மூர்த்தி தலம் ஆகிய முப்பெருமையுடைய ராமேஸ்வரம் புண்ணியத்திருத்தலம் காசிக்கு நிகரானது இத்திருத்தலத்தில் கடந்த மாதம் 25ந் தேதி கொடியேற்றத்துடன் மாசி மஹா சிவராத்திரி திருவிழா துவங்கியது. 12 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில் ஒன்பதாம் நாளான   இன்று மேஷ லக்கனத்தில் அருள்மிகு அம்பாள் ரதத்தில் எழுந்தருளினார்

பின் உள்ளுர் மற்றும் வெளிமாநில பக்கத்தர்கள் இராமா..இராமா என பக்தி பரவேசத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர். அம்பாள் தேரோட்டம் நான்கு ரத வீதிகளில் வீதி உலாவந்து பக்கதர்களுக்கு அருள்பாலித்தார். நாளை மறைநிலா அமாவசையை அருள்மிகு பர்வதவர்த்தினி அம்பாளும் -அருள்மிகு இராமநாதசுவாமி அக்னி தீர்த்தம் கடற்கரையில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும்.  இதனையொட்டி தமிழகத்தில் பல்வேறு  ஊர்களிலிருந்தும் வட மாநில பக்தர்களும் பல ஆயிரக்கணக்கானோர் ராமேஸ்வரம் வர உள்ளனர் இதற்கான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

Share this post with your friends

“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”

திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...

Read More