Mnadu News

ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாகவே தொடரும்: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு.

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்றும் ரெப்போ வட்டி விகிதம் 6 புள்ளி 5 சதவீதமாகவே தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். கடந்த 6,7 ஆகிய தேதிகளில் நடந்த நிதி கொள்கை குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வங்கிக்கடன் வாங்கியவர்கள் செலுத்த வேண்டிய வட்டி மேலும் உயராது என்பது குறிப்பிடத்தக்கது.நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. ரிசர்வ் வங்கி அதை தொடர்ந்து கவனித்து வருகிறது. நிதியாண்டில் பணவீக்கம் 4சதவீதத்திற்;கு மேலாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு முன்பு இருந்ததை விட அதிக வேகத்தில் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது என சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

Share this post with your friends