Mnadu News

ரூ.2 லட்சம் கோடியைக் கடந்த கடன் அட்டை நிலுவைத் தொகை: ரிசர்வ் வங்கி தகவல்.

ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்ட புள்ளிவிவரத்தின் படி, நாட்டில் முதன்முறையாக கடன் அட்டை நிலுவைத் தொகையானது ரூ.2 லட்சம் கோடியைக் கடந்துள்ளது.அதே சமயம், கடன் அட்டை நிலுவைத் தொகை அதிகரிப்பது என்பது மக்களின் திருப்பிச் செலுத்த முடியாத திவால் நிலையைக் காட்டவில்லை. மாறாக கடன் அட்டை வழியாக அவர்கள் செலுத்தும் கட்டணங்கள் அதிகரித்துள்ளதையும், பணவீக்கம் அதிகரித்துள்ளதையுமே பிரதிபலிக்கின்றன என்று தெரிவித்துள்ளது, அதுமட்டுமல்லாது மக்கள் மத்தியில் கடன் அட்டையைப் பயன்படுத்தி செலவிடும் வழக்கம் அதிகரித்துள்ளது என்றும் தனியார் வங்கிகள் தெரிவித்துள்ளன.அதே நேரம், கடன் அட்டைகளைப் பயன்படுத்துவதில் மட்டுமல்ல பிஎன்பிஎல் பயன்பாட்டிலும் மிகுந்த புத்திசாலித்தனத்தைப் பின்பற்றாவிட்டால் தனிநபர் திவாலாவது உறுதி என்பதே வங்கித் துறை சார்ந்த நிபுணர்களின் எச்சரிக்கையாக உள்ளது.

Share this post with your friends