Mnadu News

லட்சுமியின் இழப்பை ஏற்க முடியவில்லை: ஆளுநர் தமிழிசை அஞ்சலி.

புதுச்சேரி மாநிலத்தில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவில் யானை லாகும். திடீரென மயங்கி விழுந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தது. மக்கள் அஞ்சலிக்காக கோவில் வளாகத்தில் யானை லட்சுமியின் உடல் வைக்கப்பட்டு உள்ளது. உயிரிழந்த லட்சுமிக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்;, லட்சுமியின் இழப்பு ஒவ்வொரு வீட்டிலும் ஏற்பட்ட இழப்பு போன்றது. லட்சுமி இல்லாமல் கோவிலுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. லட்சுமி உயிரிழந்தது அதிர்ச்சியான செய்தியாகும். தங்கத்தேர் கோவிலில் வரும் போது தேர் போல வழிநடத்தி செல்வாள் லட்சுமி. லட்சுமியின் இழப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று கூறினார்.

Share this post with your friends