ஜம்மு மற்றும் காஷ்மீரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் நிறைவு நாளான இன்று பாராமுல்லா மாவட்டத்தில் பேரணி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி நிறைவடைந்ததும் முழு அளவில் வெளிப்படையான முறையில் தேர்தல் நடத்தப்படும் என கூறியுள்ளார். இதற்கு முன்பு, 3 குடும்பத்தின் பிரதிநிதிகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட கூடிய வழியில் எல்லை வகுக்கப்பட்டு இருந்தது என்றும், இனி நடைபெறும் தேர்தல்களில் உங்கள் பிரதிநிதிகளை நீங்களே தேர்ந்தெடுக்கலாம் என்று பேசினார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More