திருநெல்வேலியில் குற்ற வழக்குகளில் சிக்கிய வர்களின் பற்களை அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக் இருந்த பல்வீர் சிங் பிடுங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முதலில் விசாரணை மேற்கொண்டார்.அதையடுத்து பல்வீர் சிங் மார்ச் 29-ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, இச் சம்பவம் குறித்து அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உயர்மட்ட விசாரணை அதிகாரியாக அரசால் நியமிக்கப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் அமுதா விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More