சென்னை மெரினா கடற்கரையில் நேற்று நடந்த விமான சாகசத்தை காண வந்த லட்சக்கணக்கான மக்களில் 5 பேர் உயிரிழந்தனர்.இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்தது வருத்தம் அளிப்பதாகவும் ஆனால் அதை யாரும் அரசியல் செய்ய நினைக்க கூடாது என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் விமானப்படை கேட்ட அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து கொடுத்தது என்றும் கூட்ட நெரிசலால் மரணம் ஏற்படவில்லை, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தான் உயிரிழப்பு ஏற்பட்டது என்றும் கூறினார்.மேலும் வெயிலால் 102 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது 7 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்புகிறார்கள் என்றும் விளக்கம் அளித்தார்